காஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு!

மே 19, 2019 574

சென்னை (19 மே 2019): காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து விலகுவதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதானல் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது. அந்த போஸ்டர் நன்றாகவும் இல்லை. நான் நினைத்தால் இந்த படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...