ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்!

மே 21, 2019 562

மும்பை (21 மே 2019): தேர்தல் கருத்துக் கணிப்பை கிண்டலடித்து பதிவிட்ட விவேக் ஓபராய் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று மாலை ஊடகங்களின் கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் விமர்சித்தும், வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டலடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பதிவினால் விவேக் ஓபராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் பதிவிட்ட கருத்து ஒரு பெண்ணை காயப்படுத்தியிருந்தால் கூட அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் அந்த பதிவையும் நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...