என்னது சன்னி லியோன் முன்னிலையா? -அவரே நம்பவில்லை!

மே 24, 2019 521

புதுடெல்லி (24 மே 2019): நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரபல செய்தி ஊடகம் நடத்திய தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, சன்னி லியோன் 7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக கூறினார்.

அதாவது குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து அவசரமாகப் பேசிய தொகுப்பாளர் சன்னி தியோல் என்று கூறுவதற்கு பதிலாக சன்னி லியோன் என்று தவறாக கூறிவிட்டார்.

இதுகுறித்து ட்வீட் செய்த நடிகை சன்னி லியோன், “நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்” என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...