இயக்குநர் சித்தீக் கைது செய்யப்பட வேண்டும் - நடிகர் ரமேஷ் கண்ணா கோரிக்கை!

மே 31, 2019 723

சென்னை (31 மே 2019): ஃப்ரண்ட்ஸ் பட இயக்குநர் சித்தீக் கைது செய்யப்பட வேண்டும் என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

வடிவேலு முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த படம் ஃப்ரண்ட்ஸ். முன்னணி ஹீரோ விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை பின்னுக்கத்தள்ளி காமெடியில் கலக்கியிருப்பார் இந்த படத்தில் வடிவேலு. ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்கள்

2001 ல் வெளியான படத்தில் ரமேஷ் கண்ணா வடிவேலு தலையில் சுத்தியலை போட்டு கோமா ஸ்டேஜுக்கு போய் விடுவார் வடிவேலு. இந்த காமெடி அப்போது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த காமெடி குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் விளையாட்டாக பதிவிட்டு அதில் pray for nesamani என்று ஹேஷ்டேக் உருவாக்கியிருந்தார். இது தற்போது உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. மேலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவகைகளில் அதனை ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். வடிவேலு தலையில் சுத்தியலை போட்ட ரமேஷ் கண்ணாவை கைது செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு மீம்ஸ் பறக்கிறது.

இச்சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, "18 வருடம் கழித்து ஒரு படத்தின் காமெடி இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆகும் என்று நினைக்கவில்லை. மிகவும் எனக்கு சந்தோஷமாக உள்ளது. என்னை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் மீம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளனர். என்னை கைது செய்வது முக்கியமல்ல. இதற்கு மூல காரணமாக இருந்த இயக்குநர் சித்தீக் கைது செய்யப்பட வேண்டும்" என்று ரமேஷ் கண்ணா விளையாட்டாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...