இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியன் பாடி பதிவான அருமையான தாலாட்டு பாடல்!

ஜூன் 01, 2019 629

சென்னை (01 மே 2019): இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடும் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசயைில் படத்தின் பாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

காப்புரிமை பிரச்சனை காரணமாக இளைராஜா - எஸ்.பி.பி. இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சமீபத்தில் சந்தித்து கட்டித் தழுவிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடவிருப்பது இசை ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பழனிபாரதி எழுத்தில் “ வா வா என் மகனே “ என்னும் வரிகளில் தாலாட்டு பாடலாக இது உருவாகிறது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...