ட்விட்ரிலிருந்து அந்த பகுதியை நீக்கிய ரஹ்மான்!

ஜூன் 05, 2019 719

சென்னை (05 ஜூன் 2019): கடந்த சில தினங்களாக இந்தி திணிப்பை எதிர்த்து சூசகமாக பதிவிட்டு வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாபி ஒருவர் மரியான் படத்தில் வரும் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ளதை எடுத்து பகிர்ந்து, அதனுடன் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்யும் பலரும், ரஹ்மான் சூசகமாக ஹிந்தி திணிப்பை கலாய்ப்பதாக சொல்லி வந்தனர்.

இதன்பின் ஹிந்தி கட்டயாத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்புகள் வந்ததால், ஹிந்தி கட்டாயமல்ல என்று வரைவு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாற்றத்தை வரவேற்று ரஹ்மான் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை என மும்மொழிக் கொள்கை வரைவில் திருத்தப்பட்டது அழகிய தீர்வு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று மீண்டும் ரஹ்மான் ஒரு ட்வீட் ஒன்றை செய்துதார். அதில் ‘அட்டானமஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை பகிர்ந்துள்ளார். அட்டானமஸுக்கு தமிழில் தன்னாட்சி என்பது பொருள். ரஹ்மான் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகதான் இவ்வாறு செய்துள்ளார் என்று அந்த பதிவுக்கு கமெண்ட் செய்யும் பலரும் தெரிவித்துள்ளனர்.

ரஹ்மானின் ட்விட்டர் பேஜ் அனைவராலும் கவனிக்கப்பட்ட வண்ணம் இருக்க, மேலும் ஒரு விஷயத்தை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரஹ்மானின் ட்விட்டர் பயோவில் புதிதாக ஒன்றை சேர்த்துள்ளனர். அது என்ன என்றால் ட்விட்டரில் பதிவிடுவது அனைத்தும் அட்மினால்தான் என்பதுதான்.

முன்பு ஒருமுறை தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஹெச்.ராஜா ஒரு ட்வீட் ஒன்றை செய்திருந்தார். பல தரப்புகளில் இருந்து அதற்கு எதிராக கருத்துகள் வந்ததால் உடனடியாக அதை என்னுடைய அட்மின் தவறாக பதிவிட்டுவிட்டார் என்றார். இதைதான் ரஹ்மான்ஹெச்.ராஜாவை கலாய்க்கிறாரோ என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இதையடுத்து தற்போது பயோவில் இருந்து அட்மின்தான் பதிவிடுகிறார் என்ற விஷயம் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...