நடிகை அனுபமாவிடம் க்ளீன் போல்ட் ஆன வேகப் பந்து வீச்சாளர்!

ஜூன் 08, 2019 647

மும்பை (08 ஜூன் 2019): பும்ரா – அனுபமா இடையே காதல் மலர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்திய (பிசிசிஐ) அணிக்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த குறையை பும்ரா போக்கியுள்ளார் என்றே சொல்லாம். ஐசிசி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கும் மலையாள நடிகை அனுபாமாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுப்படுகிறது.நடிகை அனுபாமா நிவின் பாலி நடித்த பிரமேம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். தமிழில் தனுஷூடன் சேர்ந்து கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவிட்டாலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிஸியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...