நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்!

ஜூன் 14, 2019 656

சென்னை (14 ஜூன் 2019): நடிகர் விஷாலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சார பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் வழக்கம் போல் விஷால் அணி களமிறங்குகிறார்கள், விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நண்பர்கள் ஆவார்கள் ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கிசுகிசுக்கப் பட்டது. ஆனால் விஷாலுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.

இந்நிலையில் விஷால் வரலட்சுமி சரத்குமார் அப்பாவான சரத்குமாரை தாக்கி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த வரலட்சுமி சரத்குமார் விஷால் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார், நீங்கள் நல்லது செய்ததை கூறி ஒட்டு சேகரியுங்கள் இப்படி தவறாக விமர்சனம் செய்யாதீர்கள் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...