நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்!

ஜூன் 14, 2019 518

அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறவர்கள் இணைந்து புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.

ஒரு நாள் திடீரென ஒரு இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.

ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரும் சம்பவத்தால் ரியோ மற்றும் விக்னேஷ் இருவரும் அனைத்து சானல்களிலும் பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள்.

அருகில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன கவலை என சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்கையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து, யார் அந்த கொலைகாரன், அவனின் நோக்கம் என்ன, சமூகம் என்ன செய்தது என்பதே இந்த கதை.

முதலில் இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தான் வந்த இடத்திலிருந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கமர்சியல் விசயங்களுக்காக யோசிக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஒரு நல்ல தயாரித்து கொடுத்திருக்கிறார்.

டிவி, சீரியல் என கலக்கி வந்த ரியோவுக்கு இப்படம் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங்காக அமையும். சீரியல் ஓகே. சினிமாவில் தன்னை ஹீரோவாக காட்டி திறமையை நிரூபிப்பாரா என படத்தில் தொடக்கத்தில் கேட்க வைத்த அவர் இறுதியில் நிறைவேற்றிவிட்டார் என படம் பார்ப்பவர்களின் மனம் சொல்லும்.

ஆர்.ஜே.விக்னேஷ் கலாய்ப்பதில் கெட்டிக்காரர். இப்படத்தில் அவர் செய்யும் லூட்டி அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். ஹீரோவுக்கு இணையாக அவரும் இன்னொரு ஹீரோ போல தன்னை வெளிப்படுத்தி சிம்பிளான காமெடி ரோல் பிளே செய்துள்ளார். ஒரு நடிகராக அடுத்து தன்னை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பத்திரிக்கை, ஊடக துறையில் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், அந்த பத்திரிக்கை ஊடகத்தான் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற தற்போதைய நிலையையும் Youtube சர்ச்சை பிரபலம் ராதா ரவி காட்டுகிறார்.

அரசியல் வாதியாக நாஞ்சில் சம்பத்தை உள்ளே கூட்டி வந்துவிட்டார்கள். சொல்லவா வேண்டும். அவர் அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார்.

ஹீரோயின் ஷிரின் பத்திரிக்கை நிரூபராக நடிகையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கான முக்கியத்துவமும், காட்சிகளும் படத்தில் குறைவு. ஆனாலும் நடிப்பில் நிறைவு. வாழ்த்துக்கள்..

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தின் மூலம் தன்னை ஒரு இக்காலத்து இளம் தலைமுறைகளின் நாடிதுடிப்புகளை அரசியல் சர்ச்சையில் சிக்கிய சிலரை படத்தின் மூலம் பிரதிபலித்து காட்டி இடம் பிடித்து விடுகிறார்.

மயில்சாமி, பிஜிலி ரமேஷ், Youtube பிரபலங்கள் என சிலரை இங்கே காணமுடிகிறது. காட்சிகள் என ஒளிப்பதிவாளர் தெளிவாக படத்தை கொண்டு செல்கிறார். ஷாபிர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

சிறந்த பொழுபோக்கு சித்திரம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...