கீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நடிகை பரபரப்பு கருத்து!

ஜூன் 17, 2019 1030

சென்னை (17 ஜூன் 2019): பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இவர் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநடி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

இதனால் கீர்த்து சுரேஷின் ரசிகர்கள் ஸ்ரீரெட்டி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...