நடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி!

ஜூன் 23, 2019 740

சென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019 - 22ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. மொத்தம், 3,644 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; அதில், 3,171 பேர், ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.தேர்தலில், விஷால் தலைமையிலான, பாண்டவர் அணியும்; பாக்யராஜ் தலைமையிலான, சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. பாண்டவர் அணியில், தலைவர் பதவிக்கு நாசர்; பொதுச்செயலருக்கு, விஷால்; பொருளாளர் பதவிக்கு, கார்த்தி போட்டியிடுகின்றனர்.

துணை தலைவர் பதவிகளுக்கு, கருணாஸ்,பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ்; பொதுச்செயலர் பதவிக்கு ஐசரி கணேஷ்; பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்; துணை தலைவர் பதவிகளுக்கு, குட்டி பத்மினி, உதயா போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே  'மும்பையில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை' என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...