இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்ற முடிவு - பிரபல நடிகை அறிவிப்பு!

ஜூலை 01, 2019 2589

மும்பை (01 ஜூலை 2019): பிரபல இந்தி திரைப்பட நடிகை சாய்ரா வஸீம் திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

கஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் சாய்ரா அவரது தந்தை சாஹித் ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர் ,தாய் சர்கா ஒரு பள்ளி ஆசிரியை. பத்தாம் வகுப்பு மட்டுமே தேர்ந்துள்ள சைரா , திரைபடங்களில் தோன்றுவதற்கு முன்னதாக இரண்டு விளம்பரப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அமீர் கான் நடித்த குஸ்த்திவாத்தியார் கதாபாத்திரத்தை உள்ளடக்கிய தங்கள் படத்தில் வரும் அவரது இரு மகள்களில் ஒருவராக நடித்து பெயர் பெற்றார், இரண்டாவதாக சீக்ரட் சிங்கர் படத்திலும் பாடகியாக நடித்து புகழ்பெற்றார். அவை இரண்டும் இந்தியாவின் மூன்றாவது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அமைந்தது. நடிக்க வந்த முதலாம் ஆண்டே இரு பிலிம்பேர் விருதுகளும் தங்கள் படத்திற்காக ஒரு தேசிய விருதும், மேலும் சில விருதுகளும் பெற்று புகழின் உச்சிக்கு சென்றார். கஷ்மீரின் முதல்வராக இருந்த மெஹபூபா முஃப்தி, சைராவை அழைத்து பாராட்டி கஷ்மீரி பெண்களுக்கான முன்னோடி என புகழாரம் சூட்டியிருந்தார்.

முஸ்லிம் பெண்ணின் ஆடைக்குறைப்பு, பார்ட்டி நேரங்களில் அவலட்சண உடைகள் என பலவாறு சர்ச்சைகளுக்குள்ளான போதும் , விமானத்தில் பின் சீட்டில் இருந்த நபர் சைராவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதை முன்னிட்டு அவர் சமூக ஊடகங்களில் எழுதியது, அதை கண்ட விமான நிலைய நிர்வாகம் இவரிடம் மன்னிப்புக்கேட்டு குறிப்பிட்ட அந்த ஆளிடம் விளக்கம் கேட்டு கைது செய்தது, ஊடகங்களில் இது பெரிய பிரச்சனையாக பூதாகாரமெடுத்து சக நடிகர்கள் சைராவிற்காக குரல் கொடுத்தது, தொல்லை கொடுத்த ஆணுக்கு (விகாஸ் சச்தேவா) அவரது சாதியினர் சார்பாக ஆதரவு பெருகி அவர்கள் சைராவை அசிங்கமாக விமர்சித்தது என எதுவுமே அவரை இந்த முடிவெடுக்க தூண்டவில்லை என தமது முகநூல் பக்கத்தில் மிக நீண்ட பதிவினை எழுதி வெளியிட்டிருந்தார்.

தற்போது பிரியங்கா சோப்ரா உடனான The sky is pink என்ற படத்தை முடித்த கையோடு இனி தமக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்லாம் குறித்து சரியான புரிதல் இல்லாததால் சினிமாவில் நடித்ததாகவும் ஆனால் இஸ்லாம் அதனை அனுமதிக்கவில்லை என்பதை உணர்ந்து இனி ஆன்மீக வழியில் ஈடுபடப் போவதாகவும், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சாய்ராவின் அறிவிபை பலரும் வரவேற்றுள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...