தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்!

ஜூலை 06, 2019 1025

திருவனந்தபுரம் (06 ஜூலை 2019): சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்று பிரபல நடிகை காயத்ரி சுரேகம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த காயத்ரி சுரேஷ் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

காயத்ரி சுரேஷ் அளித்த பேட்டியில் “என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்பினர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்று கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள பட உலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஏற்கனவே சில நடிகைகள் புகார் கூறியிருந்தனர். மரியான் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த பார்வதியும் படுக்கைக்கு சம்மதிக்காததால் பல படவாய்ப்புகளை இழந்தேன் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...