விஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு!

ஜூலை 19, 2019 551

சென்னை (19 ஜூலை 2019): விஜய் நடிக்கும் பிகில் படத்தில் விஜய் பாடும் பாடலும் லீக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் 63-வது படமாக உருவாகி வருகிறது ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோரும் நடித்துள்ளனர். தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்குப் பிறகு அட்லீ இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ‘பிகில்’ உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘பிகில்’ படத்தில் விஜய் பாடும் பாடல் ‘லீக்’ ? : கடுப்பில் அட்லீ.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - பின்னணி என்ன?
இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ‘சிங்கப்பெண்ணே...’ எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் பாடுவதாக கூறப்பட்ட வெறித்தனம் பாடலின் சில வரிகள் தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது. ஏற்கனவே ஒரு பாடல் முழுவதாக வெளியான நிலையில், தற்போது மேலும் ஒரு பாடலும் லீக்காகி இருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாடல் சோதனைக்காக பாடப்பட்ட டம்மி பாடல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘பிகில்’ படப்பிடிப்பின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தற்போது அதிகாரபூர்வமாக பாடல்கள் மற்றும் போஸ்டர் வெளியிடுவதற்கு முன்னதாகவே லீக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், பட இயக்குநர் அட்லீ கடும் கோபத்தில் உள்ளார் என்றும், படக்குழுவினருக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் விஜய் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...