66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
இந்நிலையில் சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் பாரம் என்றொரு சுயாதின படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த வருடத்தில் நிறைய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களுக்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பல விமர்சன ரீதியாகவும், கலைநயத்துடனும் வெளியாகி மக்களை ஈர்த்தன. இந்நிலையில் ஒரே ஒரு படத்திற்கு அதுவும் பிராந்திய படம் என்பதால் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளது. இதனால் சமூக வலைதளத்தில், பரியேறும் பெருமாள், வடசென்னை, 2.0, 96, ராட்சசன், பேரன்பு போன்ற படங்கள் பல தொழில்நுட்ப ரீதியாக நன்றாகவே இருந்துள்ளது ஆனால் தமிழ் சினிமாவை இந்த அமைப்பு புறக்கணித்துள்ளதா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.