மத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகர் விஜய் சேதுபதி!

ஆகஸ்ட் 14, 2019 612

சென்னை (14 ஆக 2019): கலைமாமணி விருது நிகழ்ச்சியில் விருது வாங்காமல் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை பெற்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கும் விருது அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி வரவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதி மத்திய அரசை எதிர்த்து கருத்துக்கு தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை இதுகுறித்து விஜய் சேதுபதியிடமிருந்து இதுவரை புறக்கணிப்பிற்கான காரணம் குறித்து தகவல் இல்லை.

மேலும் நடிகர் பிரபுதேவா, நடிகர் சந்தானம் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வராதது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...