சிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்!

ஆகஸ்ட் 15, 2019 463

சென்னை (15 ஆக 2019): நடிகர் சிம்புவை குறி வைத்து மறைமுகமாக வெங்கட் பிரபு ட்விட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "வம்பை வளர்க்காமல் அன்பை வளர்ப்போம். ஜெய் ஹிந்த்" என்று ட்வீட் செய்துள்ளார்.

வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் தயாராக இருந்த மாநாடு திரைப்படத்திலிருந்து சிம்பு நீக்கப் பட்ட நிலையில் இவ்வாறு வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளது சிம்புவை குறி வைத்துதான் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...