பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்!

ஆகஸ்ட் 18, 2019 479

சென்னை (18 ஆக 2019): விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.

மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? என்று பலரும் ஆலோசித்து வரும் நிலையில் மதுமிதாவின் நண்பரும், நடிகை நளினியின் மகளுமான அருணா அவரது சமூக வலைதளத்தில் தெளிவாக கூறியுள்ளார்.

ஏற்கனவே பாய்ஸ் கேங்க் கேள்ஸ் கேங்க் என பிக்பாஸில் பிரிந்துள்ள நிலையில் மதுமிதாவை பாய்ஸ் கேங்க் கடுமையாக கேலி செய்து வருகின்றதை சென்ற வாரம் முழுவதும் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஹலோ டாஸ்கில் மதுமிதா கூறியதை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை. இதனால் ஏற்கனவே சந்தேகம் வலுத்தது. இது இப்படியிருக்க அருணா இந்த டாஸ்கில் மதுமிதா. " வருண பகவான் கர்நாடகத்தை சேர்ந்தவரோ இதனால்தான் மழை பெய்ய மறுக்கிறாரோ." என்று எதார்த்தமாக கூற அதுவே பிரச்சனையாகி கர்நாடகத்தை சேர்ந்த செரின் இதனை கடுமையாக எதிர்க்க மற்ற ஹவுஸ் மேட்களும் இதனை எதிர்த்துள்ளனர். மேலும் பல கேலி கிண்டல்களும் அரங்கேறியுள்ளன. இதனால் மனம் உடைந்த மதுமிதா தற்கொலை முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...