விஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்பு புகார்!

ஆகஸ்ட் 21, 2019 474

சென்னை (21 ஆக 2019): தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாக பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார் அளித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் மதுமிதா கடந்த வாரம் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்..

இந்நிலையில் 21.08.2019 புதன்கிழமை ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள (ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம்) 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியதாகவும், அதை ஒப்புக் கொண்டு சென்றவர் 19.08.19 ம் தேதி 15.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் தரும் வரை காத்திருக்க முடியாது என்று மிரட்டி உள்ளார்" என்று புகாரில் கூறியுள்ளார்.

20.08.2019ஆம் தேதி 19.00 மணிக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...