கென்னடி கிளப் - சினிமா விமர்சனம்!

ஆகஸ்ட் 23, 2019 565

கென்னடி க்ளப் சுசீந்திரனுக்கும், சசிகுமாருக்கும் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள படம்.

அதே நேரத்தில் பாண்டியநாடு படத்தில் பார்த்த பாராதிராஜா இதில் மிஸ்ஸிங், ஏதோ அவர் படம் முழுவதும் வந்தும் பெரிதாக மனதில் நிற்கவில்லை, கபடி ஆரம்பித்த கதையில் தொடங்கி அது வளர்ந்து தற்போது எப்படி ஒரு விளையாட்டு அரசியலாக மாறியுள்ளது, இதன் பின் எப்படி பணம் விளையாடுகின்றது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.

படத்தில் ஹீரோயின் என்று தான் யாருமில்லை, நடித்தவர்கள் அனைவருமே ஹீரோயின் தான், கபடி காட்சிகள் அனைத்தும் அத்தனை தத்ரூபம், அதில் ஒரிஜினல் கபடி வீராங்கனைகளையே நடிக்க வைத்தது பாராட்டத்தக்கது.

அதிலும் டுவின்ஸாக நடித்திருக்கும் இருவர், பாராதிராஜா மகளாக வருபவர், சாப்பாடு தான் முக்கியம் மானம் முக்கியமில்லை என வெகுளியாக சொல்லும் பெண் என பலரும் மனதை கவர்கின்றனர்.

எப்படியும் இந்த மாதிரி விளையாட்டு போட்டி படம் என்றாலே கிளைமேக்ஸ் சீட்டின் நுனிக்கு வர வைப்பார்கள், படத்தில் ஆரம்பத்திலிருந்து பெரிதும் அப்படி எந்த காட்சி இல்லை என்றாலும், கிளைமேக்ஸில் கண்டிப்பாக அனைவரும் சீட்டின் நுனிக்கு வருவது உறுதி.

படத்தின் ஒளிப்பதிவு நாமே கபடி அரங்கில் சென்ற அனுபவம், டி.இமான் பின்னணியில் கலக்கியுள்ளார், ஆனால், விஸ்வாசம் ஹாங் ஓவர் இன்னும் போகவில்லை போல.

சுசீந்திரனின் வழக்கமான பாணியில் வெற்றி அடைந்த படங்களின் கதைக்களம்.

பார்க்கலாம்.

தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...