ரூமுக்கு தனியாக அழைத்த பிரபல தமிழ் தயாரிப்பாளர் - நடிகை வித்யாபாலன் பகீர் தகவல்!

ஆகஸ்ட் 27, 2019 660

சென்னை (27 ஆக 2019): பாலிவுட் நடிகை வித்யாபாலனை பிரபல தமிழ் தயாரிப்பாளர் ரூமுக்கு தனியாக அழைத்ததாக பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகையான வித்யா பாலன் முதன்முறையாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியிருக்கிறார். அவருக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்தாலும், பிறகு அவர் செட்டாக மாட்டார், என்று கூறி நீக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் வித்யா பாலன், அஜித்திற்கு பொருத்தமான மனைவியாக நடித்து தமிழ் சின்ன ரசிகர்களுக்கு ரசிகையாகியுள்ளார். மேலும் தொடர்ந்து நல்ல கதைகளாக இருந்தால் தமிழில் நடிப்பேன், என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருந்த வித்யாபாலன் " சென்னையில் ஒரு இயக்குனர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, ”நான் சென்னையில் இருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் வந்தார். என்னிடம் பேச வேண்டும் என்றார். நான் அவரிடம் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவர் 'நிறைய பேசணும்.. ரூமுக்கு போவோம்' என ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். பின்னர் ரூமுக்கு சென்று அவர் என்ன நினைக்கிறார் என்பதை கவனித்தேன். அவரின் எண்ணம் என் மீது இருந்தது. எனினும் சுதாரித்துக்கொண்டு ரூம் கதவை திறந்தே வைத்தேன். பின்னர் வெறும் ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்" என வித்யா பாலன் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...