பிக்பாஸ் கவினின் பழைய காதலி தற்போதைய பிரபல நடிகை?

ஆகஸ்ட் 30, 2019 352

சென்னை (30 ஆக 2019): விஜய் டிவி பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் காதல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் கவின்.

தற்போது சக போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவுடன் காதல் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் ஏற்கனவே தற்போதைய பிரபல நடிகை பிரியா பவானி சங்கருடன் காதல் கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே லாஸ்லியாவிடம் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார், அதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்கள் அனைவரும் அவர் ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பல புகைப்படங்களை எடுத்து தற்போது ஷேர் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் நல்ல நண்பர்களாக கூட இருந்திருக்கலாம், ஒரு சிலர் வேண்டுமென்றே தற்போது எடுத்து இதை வேறு திசையில் பேசுகிறார்களா என்றும் யோசிக்க வைக்கின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...