காஷ்மீர் குழந்தைகள் குறித்து நடிகை திரிஷா கவலை!

ஆகஸ்ட் 30, 2019 454

சென்னை (30 ஆக 2019): காஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலை குறித்து நடிகை த்ரிஷா கவலை தெரிவித்துள்ளார்.

என்டிடிவி நேர்காணலில் இதுகுறித்து தெரிவித்த நடிகை த்ரிஷா, "குழந்தைகள் மீது நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல்கள் அவர்களுக்கு அதிகம் ஏற்படுகின்றன. இதனை எதிர்த்து நாம் போராட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

கல்வியிலும் அவர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டதை அடுத்து அங்கு குழந்தைகள் இதுவரை பள்ளி செல்ல முடியாத அவல நிலை இருப்பது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...