பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றம் - தொகுப்பாளராக நடிகை ரம்யா கிருஷ்ணன்!

செப்டம்பர் 01, 2019 549

ஐதராபாத் (01 செப் 2019): பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டது. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பிரபலங்கள் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள புரமோவை ஸ்டார் மா டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் சிவகாமியாக சிறப்பாக நடித்ததன் மூலம் பாராட்டப்பட்டார். இந்த புரமோவில், ரம்யா கிருஷ்ணன் பாகுபலி சிவகாமி கெட்டப்பில் வந்து தொகுத்து வழங்குகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...