இனி திரையரங்கு கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது!

செப்டம்பர் 02, 2019 254

சென்னை (02 செப் 2019): சினிமா திரையரங்குகளில் கவுண்டரில் டிக்கெட் விற்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதேபோல் அங்கு விற்கப்படும் உணவுப்பொருள்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...