பிக்பாஸ் மதுமிதா நடிகர் கமல் மீது போலீசில் பரபரப்பு புகார்!

செப்டம்பர் 04, 2019 332

சென்னை (04 செப் 2019): பிக்பாஸ் நடிகை மதுமிதா நடிகர் கமல் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

கையில் காயத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா வெளியேறியதற்கான உரிய காரணம் இதுவரை விஜய் டிவி கூறவில்லை.

இந்நிலையில் நடிகை மதுமிதா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா சக போட்டியாளர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதாகவும், இதனை நடிகர் கமல் கண்டிக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...