தனக்கு வழங்கப் பட்ட விருதை தூக்கி வீசிய பிக்பாஸ் லாஸ்லியா!

செப்டம்பர் 06, 2019 575

சென்னை (06 செப் 2019): பிக்பாஸில் சாக்சி கொடுத்த பச்சோந்தி விருதை லாஸ்லியா தூக்கி எறியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, 100 நாட்களுக்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும். இது தற்போது 74 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளனர்.

இன்று 75-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்குகின்றனர்.

அபோது பச்சோந்தி என்ற விருதினை லாஸ்லியாவிற்கு மோகன் அறிவிக்க, அதனை சாக்‌ஷி வழங்குகிறார். அதனை ஏற்க மறுத்த லாஸ்லியா அந்த விருதினை மேடையிலேயே தூக்கி எறிந்துவிட்டு இது எனக்கு தேவை இல்லை என்று வெளியேறுகிறார்.

இதனால் கோபமடைந்த சாக்‌ஷி மரியாதை இல்லாத இடத்தில் நான் ஏன் தலைமை ஏற்க வேண்டும் என்று மேடையில் இருது கீழே இறங்குகிறார். மோகனும் ஆவேசமாக பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...