மகாமுனி - சினிமா விமர்சனம்!

செப்டம்பர் 07, 2019 701

தொடர் தோல்வியில் உள்ள ஆர்யாவுக்கு கட்டாயம் வெற்றி கொடுக்கும் நிலையில் வந்துள்ள படம் மகாமுனி.

ஆர்யா மகா, முனி என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். சிறுவயதில் தாய், தந்தை ஆதரவில்லாமல் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள்.

இதில் முனியை ரோஹினி தத்தெடுத்து வளர்த்து ஆளாக்குகிறார். இந்த முனி அமைதி, படிப்பு என யார் வம்புக்கும் போகாமலிருப்பார். அவரின் மீது ஊரில் உள்ள செல்வந்தர் மகளான மஹிமா நம்பியாருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையில் தாழ்த்தப்பட்டவராக கருதி முனியை கொலை செய்ய திட்டம் நடக்கிறது.

அதே போல மகா அரசியல்வாதி ஒருவரின் உதவியாளராக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்துஜா இருவருக்கும் ஒரு மகன். மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஏதோ ஒரு விசயத்திற்காக மகா ஐ கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது.

இறுதியில் என்ன ஆனது? உயிர் ஆபத்தில் மகா தப்பித்தாரா? அவரை கொலை செய்ய முயலும் பின்னணி என்ன? முனி என்ன ஆனார் என்பதே இந்த மகாமுனி.

ஹீரோ ஆர்யாவுக்கான கிரேஸ் எப்போதும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே அவர் நான் கடவுள் படத்திற்காக மிகுந்த ரிலிஸ் எடுத்து நடித்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

தற்போது மகா, முனி என இரண்டு கெட்டப்களில் இப்படத்தில் இறங்கியிருக்கிறார். அவரின் கதை தேர்வு சரியானது. அவருக்கான கதைக்களமாக அமைந்திருக்கிறது. படத்திற்காக அவர் ரிஸ்க் எடுத்தது நன்றாக இருக்கிறது.

இதில் முனி ஆர்யா மனப்பக்குவம் அடைந்த நபராக ஜாதி எப்படி உருவானது, கடவுள் பற்றிய புரிதல் இவை பற்றி மிக எளிமையாக எல்லோரும் உடனே புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச்சொல்லும் காட்சி சரியான தேர்வு.

ஹீரோயின் மகிமா நம்பியார் இதழியல் படிக்கும் பெண்ணாக, மாற்று சிந்தனை கொண்டவராக கேரக்ரில் மிளிர்கிறார். அவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும் அதிலும் அழுத்தமான விசயத்தை பதிவு செய்கிறார்.

அதே போல மகா ஆர்யாவின் பின்னணியில் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதை கேரக்டரே வெளிப்படுத்துகிறது. வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்பது போல படத்தில் பளிச்சிடும் விசயங்கள் மகா காட்டுகிறார்.

மேயாத மான் இந்துஜா மகாவுக்கு ஜோடியாக வெகுளியான படிப்பறிவில்லாத கிராம பெண்ணாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். அவருக்கு வரும் இக்கட்டான சூழ்நிலையும் சோகமயமானது. எல்லோருக்கும் ஷாக் தான். எதார்த்தமான நடிப்பு.

இயக்குனர் சாந்த குமாரின் இந்த மகாமுனி கதை மிக ஆழமானது. கேரக்டர்கள் அனைவரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராம பின்னணி கதைக்கு இயற்கையாக கொண்டு செல்கிறது.

தமனின் இசை படத்தின் கதைக்கு பக்க பலம், காட்சிகளுக்கு இடையில் உணர்வுப்பூர்மான நகர்வு.

அதே போல காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதும் பொழுது சாயும் அந்த மாலை வேளையில், இரவில் தான். இயல்பான தோற்றத்தை வரவைக்கும் எடிட்டிங்.

நல்ல முயற்சி பார்க்கலாம்.....!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...