பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மரணம்!

செப்டம்பர் 07, 2019 575

சென்னை (07 செப் 2019): பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் (48) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் வரும் மேகமாய் வந்து போகிறேன் பாடலின் மூலம் பலரையும் கவர்ந்தவர் முத்துவிஜயன். 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்தில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலை எழுதினார். 'கள்வனின் காதலி', 'தென்னவன்', 'நெஞ்சினிலே', 'வல்லதேசம்' உள்ளிட்ட படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

முத்துவிஜயன் அண்மைக்காலமாக மஞ்சல் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்படு வந்தார். பாடலாசிரியர் சங்கத்தின் உதவியின் மூலமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் முத்து விஜயனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் முத்து விஜயன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...