பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பா!

செப்டம்பர் 11, 2019 916

சென்னை (11 செப் 2019): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் எனப்படும் சுவாரஸ்யமான டாஸ்க் தொடங்கியுள்ளது. முதலில் முகினின் தாய் மற்றும் தங்கை வந்தனர்.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி 10 வருடமாக சந்திக்காமல் உள்ள லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பாவும் லாஸ்லியாவை சந்திக்க வருகிறார். இது லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரகசிய அறையில் இருக்கும் லாஸ்லியா அப்பா என்று அழைக்கும் சேரனும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பாவும் ஒன்றாகவே வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...