பிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

செப்டம்பர் 15, 2019 396

சென்னை (15 செப் 2019): பிக்பாஸ் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3. இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த முறையும் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவிற்கு சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி இந்த இரண்டு சீரியலில் எதாவது ஒன்றின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லிய நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைத்துறையில் லாஸ்லியாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...