பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குதல்!

செப்டம்பர் 16, 2019 360

சென்னை (15 செப் 2019): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அறிவித்திருப்பதை கமல் நேரடியாக தாக்கிப் பேசினார்.

விஜய் டிவியில் 80 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

அதேவேளை கமல் வாரம் இருநாட்கள் தோன்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அவ்வாறு தொகுத்து வழங்கும்போது நாட்டில் நடக்கும் அநீதிகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குவார். அந்த வகையில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து பேசிய கமல் குழந்தைகளை துன்புறுத்துவதற்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

அதன் தொடர்ச்சியாக குழந்தை கல்வி குறித்து பேசிய கமல், குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு கொண்டு வர காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் எவ்வளவோ கஷ்டப் பட்டு கல்வி ஊட்டினார்கள் ஆனால் சமீபத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் கல்விக் கொள்கைகள் புகுத்தப் பட்டிருப்பதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...