பிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு!

செப்டம்பர் 20, 2019 327

சென்னை (20 செப் 2019): விஜய் நடிக்கும் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த் அடிதடி அட்டூழியத்தால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சாய்ராம் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட வளாகத்தின் கொள்ளலவு 8000 பேர் மட்டுமே. ஆனால் திரண்டிருந்த ஜனத்திரளோ சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. காரணம் பிளாக்கில் பிரிண்ட் செய்யப்பட்டு விற்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கட்டுகள்.விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்தில் கார் நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர்.

கிரீன்பாஸ் எனும் முதல்தர நுழைவு அனுமதி வைத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளே போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். பிகில் படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் ஒரு கிலோமீட்டர் நடநது போய்க்கொண்டிருந்தார். நீண்ட தூரப்பயணம், கடும் முயற்சி மற்றும் பொருட்செலவில் வாங்கிய நுழைவுச்சீட்டு கையில் இருந்தும் விழா அரங்குக்குள் நுழையமுடியாத கோபத்தில் நூற்றுக்கணக்கானோர் ஏற்பாட்டாளர்களுக்குச் சாபம் விட்டுக் கொண்டிருந்தனர்.

இதில் பொதுமக்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. விஜய் ரசிகர்கள்தான் கலாட்டாவில் ஈடுபட்டனர் என்று ஒரு தரப்பார் கூறுகின்றனர். ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் இதை அடிதடியாக மாற்றி விட்டனர் என்கின்றனர். இன்னொரு தரப்பார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...