பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா?

செப்டம்பர் 21, 2019 581

சென்னை (21 செப் 2019): பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் லாஸ்லியா வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் நடத்தப் படும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. முக்கியமாக கவின் லாஸ்லியா காதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே இந்த வாரம் வீட்டை விட்டு வெளியாகும் ஆட்களில் மக்கள் ஓட்டெடுப்பின்படி ஷெரின் லாஸ்லியா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் லாஸ்லியாவை விட ஷெரின் முன்னணியில் உள்ளார். எனவே லாஸ்லியா வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர் அறிவுருத்தியும் கவினுடன் காதலை தொடர்வதாகவே தெரிவதால் பார்வையாளர்கள் லாஸ்லியாவை கடுமையாக விமர்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...