பார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்!

செப்டம்பர் 22, 2019 254

சென்னை (22 செப் 2019): விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பார்வையற்ற சிறுவன் பாடிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் பாடிய விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே என்ற பாடலின் வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது. இதை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை தனக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து அந்த சிறுவன் குறித்த விபரம் கிடைத்துள்ளதாகவும் விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் இமான் உறுதியளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...