பிகில் திரைப்படத்தால் சிக்கலில் சிக்கியுள்ள சாய்ராம் கல்லூரி!

செப்டம்பர் 24, 2019 338

சென்னை (24 செப் 2019): பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்தது. .நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது. இந்த விழாவில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அரசுக்கு எதிராக நிறைய கருத்துக்களை பேசினார்.

இந்த நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. யாரிடம் அனுமதி வாங்கி விழாவை நடத்துனீர்கள். கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் அந்த கல்லூரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...