பிரபல நடிகை கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செப்டம்பர் 27, 2019 685

இஸ்லாமாபாத் (27 செப் 2019): பாகிஸ்தான் பிரபல நடிகை குவான்டீல் பலூச் கொலை வழக்கில் அவரது சகோதரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு மாடல் அழகியும் டிவி நடிகையான குவான்டீல் பலூச் (பவுசியா அசிம்), கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று முன்னர் திட்டி இருந்தார்.

மேலும் ஒரு வீடியோ பதிவில் டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.

ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

அப்போது பாகிஸ்தான் வெற்றிபெற முடியாமல் போனது பற்றியும், தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்தும் தனது வயிற்றெரிச்சலை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருந்தார்.

இந்நிலையில்தான் குவான்டீல் பலூச்(26) பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் 15-7-2016 அன்று பிணமாக கிடந்தார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

முல்தான் கோர்ட்டில் நடைபெற்றுவந்த இந்த கொலை வழக்கில் அளிக்கப் பட்ட தீர்ப்பில், குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இம்ரான் ஷபி, இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...