கமலை நான் வெறுக்கிறேன் - இயக்குநர் அமீர் பரபரப்பு பேட்டி!

செப்டம்பர் 28, 2019 630

சென்னை (28 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனை நான் கடுமையாக வெறுக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர் அமீர். இவரிடம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து கேட்டதற்கு, "கமலை நடிகராக, ஒரு கட்சியின் தலைவராக ரொம்பவே மதிக்கிறேன். என் அன்புக்குரியவர், மரியாதைக்குரியவர். அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆனால் பிக்பாஸ் என்ற ஸ்க்ரிப்டட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனையோ மக்களுக்கு பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகள் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன பயன் உண்டு? எனவே கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சேரன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அமீர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...