பிக்பாஸிலிருந்து வெளியான கவின் செய்த காரியம் தெரியுமா?

செப்டம்பர் 28, 2019 590

சென்னை (28 செப் 2019): பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின், சிறையிலிருந்த தனது தாயை ஜாமீனில் எடுத்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வந்த கவின், காதல் பிரச்சனையில் சிக்கி உள்ளேயும் வெளியேயும் பல எதிர்ப்புகளை சந்தித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த 5 லட்சம் ஆபர் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே கவினின் தயார் ராஜலட்சுமி சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இது பிக்பாஸில் இருந்த கவினுக்கு தெரியாது.

இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த அவர் தாய் கைதாகி சிறையில் இருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இறங்கிய கவின், தற்போது அவர்களை ஜாமீனில் எடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுப்பதாகக் கவின் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...