முஸ்லிம் பெயரில் படம் எடுக்க இந்து அமைப்பு எதிர்ப்பு!

செப்டம்பர் 29, 2019 588

திண்டுக்கல் (29 செப் 2019): சுல்தான் திரைப்படம் திப்பு சுல்தான் தொடர்பான கதை என்று கூறி மத அமைப்பு ஒன்று திண்டுக்கல்லில் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் திப்பு சுல்தானின் வரலாற்றை பின்னணியாக கொண்டது எனக் கருதி அதனை திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என நேற்று படப்பிடிப்புத் தளம் அருகே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதை தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனை தொடர்ந்து, சுல்தான் திரைப்படம் திப்பு சுல்தானின் வரலாற்றை பின்னணியாக கொண்டது கிடையாது என்றும், அது ஒரு வரலாற்றுப் படமே கிடையாது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு திரைப்படம் எதை காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளர்களுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.

ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...