பிக்பாஸ் முகேனுடன் நான் இருக்கும் வீடியோவை வெளியிடுங்கள்: பிரபல நடிகை பரபரப்பு ஆடியோ!

அக்டோபர் 03, 2019 710

சென்னை (03 அக் 2019): பிக்பாஸ் முகேனுடன் நான் இருக்கும் வீடியோக்களை வெளியிடுங்கள் என்று நடிகை மீரா மிதுன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டிக்கு, சாண்டி, முகேன், லாஸ்லியா, நடிகை ஷெரின் ஆகியோர் முன்னேறி உள்ளனர். இந்த வார இறுதியில், பிக்பாஸ் வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றவரும், நடிகையும், மாடல் அழகியுமான, மீரா மிதுன் பேசியதாக, 'வாட்ஸ் ஆப்' பதிவு ஒன்று, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அதில், முகேனுடன் நான் இருக்கும் வீடியோக்களை வேகமாக பகிருங்கள். பின்னணியில், முகேன் பாடிய பாடலையும் இணைத்து, பலருக்கும் பகிர வேண்டும். நான் சொன்னபடியே அனைவருக்கும், பணத்தை, 'ஆன்லைனில்' அனுப்பி விடுவேன்.இவ்வாறு, மீரா மிதுன் கூறியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...