பிக்பாஸ் முடிவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி உண்டு!

அக்டோபர் 05, 2019 422

சென்னை (05 அக் 2019): கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. தற்போது ஷெரீன், லோஸ்லியா, முகென், சாண்டி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் டைடிலை வெல்லப் போவது யார்? என்பது தான் ரசிகர்களின் தற்போதைய மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெரும்பாலும் முகின் ராவ் வெற்றி பெறுவார் என்றே கருதப்படுகிறது. எனினும் எதிர் பாராததை எதிர் பார்க்கலாம்.

அதேபோல இரண்டாமிடம் லாஸ்லியா பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் இருந்த போதிலும், விஜய் டிவியின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு இரண்டாமிடம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், இதுவே நாளைய முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...