கமல் ஹாசன் படத்தில் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோ - அடித்தது லக்!

அக்டோபர் 05, 2019 459

சென்னை (05 அக் 2019): கமல் ஹாசன் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவிற்க முடியாத போட்டியாளரான தர்ஷன் கடந்த வாரம் எலிமினேட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தர்ஷனுக்கு பல நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும் என தகவல் வெளியானது.

இது இப்படியிருக்க கமல் ஹாசனின் ராஜ்கமல் இன்டெர்னேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இசை ஜிப்ரான். படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

கமல் தயாரித்து பிறர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...