பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்!

அக்டோபர் 07, 2019 490

குமுளி (07 அக் 2019): பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கேரளாவின் குமுளி அருகே நடந்த படப்பிடிப்பு தளத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிர்பிரிந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...