ரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அக்டோபர் 12, 2019 1016

சென்னை (12 அக் 2019): ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போடியிடும் என அறிவித்தார். ஆனால் இதுவரை கட்சி பெயரை ரஜினி அறிவிக்கவில்லை.

மாறாக தொடர்ந்து சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2.0 படத்திற்குப் பிறகு ரஜினி படங்களே நடிக்க மாட்டார் என சொல்லப் பட்ட நிலையில், தொடர்ந்து பேட்ட, தர்பார், என்று நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...