தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்!

அக்டோபர் 16, 2019 424

சென்னை (16 அக் 2019): விக்ரம் நடிக்கும் தமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இணைந்து நடிக்கவுள்ளார்.

விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் சியான் 58-இல் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி. மஜா பன்றோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...