பிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா!

அக்டோபர் 18, 2019 487

சென்னை (18 அக் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மீண்டும் கவின் லாஸ்லியா இணைந்துள்ளனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. அதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக இந்த சீசனில் காதல் பறவைகளாக வர்ணிகப் பட்ட கவின் லாஸ்லியா இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். எனினும் இருவரும் ஒன்றாக இருப்பது போன்று இல்லை. இருவரும் தனித்தனியே அமர்ந்திருப்பதால், லாஸ்லியா கவின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மற்றும் கண்டெண்டுக்காக காதல் நாடகம் நடத்தியிருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் அம்மாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...