டெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்!

அக்டோபர் 21, 2019 391

பெங்களூரு (21 அக் 2019): டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த அக்டோபர் 18-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோகுல் சாய்கிருஷ்ணா மறைவுக்கு திரையுல பிரமுகர்கள் இர்ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...