மது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்!

அக்டோபர் 22, 2019 571

மும்பை (22 அக் 2019): மது பழக்கத்தால் என் வாழ்க்கை நாசமாக போனது என்று நடிகை மனீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

தமிழில் பம்பாய் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் மனிஷா கொய்ராலா, பின்பு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்றார். மேலும் இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நைனிடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மனிஷா கொய்ராலா கலந்து கொண்டு பேசியபோது அவரது வாழ்க்கை திசை மாறியதைப் பற்றி பேசினார்.

"எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழக்கப்போகிறது என்று உணர்ந்தேன். ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை நான் எழுதிய புத்தகத்திலே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது." என்று மனிஷா கொய்ராலா கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...