கைதி - ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றி: சினிமா விமர்சனம்!

அக்டோபர் 26, 2019 396

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி.

போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ். நரேன் தலைமையிலான டீம் தான் அதை செய்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும் என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது வில்லன் கேங்.

அந்த சமயத்தில் 10 வருடங்கள் ஜெயிலில் இருந்த கார்த்தி தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.

அதன்பிறகு மொத்த போலீஸ் அதிகாரிகளும் ஒரு சூழ்ச்சியில் சிக்கி உயிர்பிழைக்கவே போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கார்த்தி உதவினால் தான் அவர்களை காப்பாற்ற முடியும் என்கிற நிலை.

கார்த்தி அவர்களுக்கு எப்படி உதவினார், அதில் வரும் தடங்கல்களை எப்படி சமாளித்தார், மகளை பார்த்தாரா? என காட்டியுள்ளது மீதி படம்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது கார்த்தி மட்டும்தான். மகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்கிற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக, மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என பேசும் அப்பாவாக பல காட்சிகளில் நடிப்பில் ஜொலித்துள்ளார். நரேன் அந்த போலீஸ் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தான். ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை த்ரில்லாகவே வைத்திருக்கிறது. படம் முழுக்க ஆக்க்ஷன் தான் என்றாலும், இடையிடையே செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் குறைவில்லை.

படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. இத்தனை சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

- சாம் CSன் பின்னணி இசை. படத்தில் எந்த பாடல்களும் இல்லை என்பதால் படம் முழுக்க பின்னணி இசையில் தன் திறமையை காட்டியுள்ளார்.

- ரியலாக வடிவமைக்கப்பட்டிருந்த சண்டை காட்சிகள்.

கார்த்திக்கு மற்றும் ஒரு வெற்றிப் படம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...